Tuesday, April 10, 2007

கவிதையாகவா... கண்ணீராகவா...

நீ பிரிந்து சென்றபின்
உன் நினைவுகளை எப்படி
செலவழிக்க...
காகிதங்களில்
கவிதையாகவா
கண்களில
கண்ணீராகவா...

MALAR


THARUNAM


TRAIN


நீ ரயிலுக்காக
காத்திருக்கிறாய்
வந்துவிடவேண்டுமென்று...
நான் பிரிவுக்காக
காத்திருக்கிறேன்
வந்துவிடக்கூடாதென்று...

SARKARAI

உன் வீட்டு சமையல் அறையில்
உப்பு இல்லையா என்று கேட்டதற்கு...
பதில் சொல்லாமல் மௌனம் காத்தன
நீ தொட்டு சர்க்கரையாய் மாறிய
உப்புகள்...

THUPATTA

உன் படுக்கை அறையில் யாரது கர்வமாய்
"ஓ! என்ன அவசரமாய் இருந்தாலும் - நீ
வெளியில் செல்லும்போது மறக்காமல்
அழைத்து செல்லும் துப்பட்டாவா...

PAATHANI

உன் பாதணிகள் செய்த
புண்ணியம் என்ன...
எத்தனை பாதணிகளுக்கு கிடைக்கும்
மலர் சுமக்கும் பாக்கியம்...

NEER

தொண்டைக்குழி அடைக்கும்
உன் நினைவுகளை
எந்த நீர்கொண்டு விழுங்குவது
விடைகேட்டு வருகிறது
என் கண்ணீர்...

MUTKAL

நீ செருகிய வார்த்தை முட்களை
பத்திரமாய்  வைத்திருக்கிறேன்...
என்றேனும் நீ இதயம் தருவதாயிருந்தால்
என் மார்பினில் வைத்து தைத்துக்கொள்ள
வசதியாய்...

Friday, April 6, 2007

thalattu


diary 2004


semippu-poem

என் இடது கன்னத்தைவிட
வலது கன்னம்தான் பிடிக்கும்...
உன் முதல் முத்தத்தை
அங்கேதான் சேமித்து வைத்திருக்கிறேன்...

KAVITAIKAL

என்  கவிதைகள்
கண்கள் மூடி
சிந்தித்தவைகள் அல்ல
இதயம் கதறி
சிதறியவைகள்...

RAJAVELin KAVITHAIKAL