Wednesday, December 10, 2008

LOVE

எப்போதோ பார்த்த நினைவுகள்
உன்னை பாவாடை தாவணியில் பார்த்தது
என்னை கண்டு ஒளியும் உன் வீட்டு அறை
எனக்காக  மட்டுமென்று நீ ஒளித்து
எடுத்து வைத்திருந்த நீலபீங்கான் தட்டு
என்னை தனியாய் சந்தித்த கொல்லைபுற
வேப்பமரம்...
நம்மை மௌனமாய் ரசித்த அந்தி நேர
சூரியன்...
நம்மை பார்த்து எதோ புரிந்துகொண்ட
உன் அக்கா...
உன்னை மறந்துவிட வேண்டுமென்று
                                                                                  மௌனமாய் உன் அம்மா...
                                                                                  அன்று தொலைந்துபோன உன் சிரிப்பு
                                                                                  அன்று தொலைந்துபோன என் காதலி
                                                                                  எல்லாம் எப்போதோ பார்த்த நினைவுகள்...

Post a Comment