Wednesday, December 23, 2009


வருவேன் என
சொல்லி சென்றாய்...
இதுவரை வரவில்லை
நீ சொன்னது
"கனவில்" என்றா...
"கல்லறைக்கு" என்றா...

Tuesday, December 22, 2009

மழை நாளில்
குடைகொண்டு
வருவதில்லை
நான்...
எப்படியும்
உன் தாவணி
விரியும்...
உன் அழகும்...

கடவுள் கேட்டான்...
இறவாத வரம் வேண்டுமாவென
இறவாத வரம் எனக்கெதற்கு
உனை மறவாத வரம்
நீ தந்தபிறகு...

பேரலையாய் உன் அன்பு
சிலநேரம் சிதைந்துபோகிறேன்...

Saturday, December 19, 2009

உன்னை முழுதாய்
மறந்துபோன வேளையில்
நீண்ட வருட இடைவெளியில்
தேவையற்ற வேளையில்...
உன் நினைவு வந்தது...
யோசித்து யோசித்து பார்க்கிறேன்...
நம் விருப்பம் இல்லாமல்
நம் பிரிவு நடந்த
அதே தொடர்வண்டியின்
அதே இருக்கையில்
பயணம் செய்துகொண்டிருந்தேன்...
இந்த தொடர்வண்டி
இன்னும் நம்மை
ஞாபகம் வைத்து
அழுதுகொண்டிருக்கிறது...

Friday, December 18, 2009

என்று நான் இறப்பேனென்று
இன்று நான் சொல்கிறேன்
உன் வாசமில்லா சுவாசம் என்றோ
அன்று நான் சாகிறேன்...

Monday, December 14, 2009

இமையாத விழி கொண்டேன்
உன் முதல் பார்வையை
தவறவிட்டது போல
இனி எந்த கவிதையையும்
தவறவிடமாட்டேன்...