Sunday, September 4, 2011



பெண்ணாகவே பிறப்பேன்...


மீண்டும் பிறப்பதாயிருந்தால்
பெண்ணாகவே பிறப்பேன்...
அதுவும் நீயாகவே...
நீ எப்படி என்னை
காதலிக்கிறாயென
தெரிந்துகொள்ளவேண்டும்...

அவ்வளவுதான்...



உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
ஏன் தெரியுமா உனக்கு...
தெரிந்து என்ன செய்யபோகிறாய்
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
அவ்வளவுதான்...



GOD


                             இறக்காதிருக்க இல்லாத கடவுளிடம் பிரார்த்தனை
                             பிறந்துவிடபோகிறான் நம்மை காப்பாற்ற...

Tuesday, July 5, 2011

ஆறுதல் சொல்லவேண்டும்...




உன் கூந்தல் மலர்களை
தூக்கியெறிக்கையில் சொல்
அவைகளுக்கு ஆறுதல்
சொல்லவேண்டும்...