Monday, May 28, 2012


சொல்லி அழ யாருமில்ல
இதில் சொந்தகத ஏதுமில்ல
காதலிச்ச எல்லோருக்கும்
எல்லாமுமே வாய்ச்சதில்ல
உங்கதையும் என்னப்போல
எங்கதையும் உன்னப்போல
ஆறுதலும் சொல்லிடத்தான்
யாரிடமும் வார்த்தையில்ல...
எந்தபிறவியிலும் யாருமிங்கு
யாருக்கும் சொந்தமில்ல
வந்தவேளை முடிஞ்சா
சொல்லிசெல்ல யாருக்கும் நேரமில்ல...
சாமிகிட்ட சொல்லி அழுதேன்
கல்லுக்குள்ள ஈரமும் பார்க்கவில்ல
யாரு செஞ்ச பாவம்
என்மனசு கல்லாபோன சாபம்....

Saturday, May 26, 2012

எதற்காகவும்
என்னோடு
பேசாது இருந்துவிடாதே 
அதனினும்  கொடிது 
மரணமல்ல...

Thursday, May 24, 2012


எனக்கு

எதுவும் தெரியாது

சொல்லிக்கொடு

உனக்கு

எது வேண்டுமென்று...

கண்களால்...


எதையும்
மூடிமறைக்காதே
முதலில்
அதைத்தான்
திறந்து பார்ப்பேன்...
               
                 

Wednesday, May 23, 2012


உன்னை
உடை
மறைக்கிறது
உடையை
வெட்கத்தால்
மறைக்கிறாய்
முதலில்
எதை விலக்குவது...காற்றும்
நுழைந்திடாது
இறுக்க்க்கி...
அணைக்கிறாய்
சுகம்தான்...
என் கைகள்
எப்படி நுழைவதாம்...உன்னிதழின்
சிணுங்கல்களுக்கு
ஏதேதோ அர்த்தம்
சொல்கிறாய்
உன் கொலுசின்
சிணுங்கல்களுக்கு
காதலை தவிர
வேறு அர்த்தம்
சிணுங்குவாயா...

Tuesday, May 22, 2012


என் குங்குமம்
உன் முகத்தில்
என் மலர்கள்
உன் மார்பில்
நானென்ன
சொர்க்கத்திலா...


உன் அங்கமெல்லாம்

என்னை வருட

என்  இதழெல்லாம்

உன்னை தொழுக

காத்திருக்கிறேன்

முதன் முறையாய்

அல்ல...

கனவில் எல்லாம்

முடித்துவிட்டு...


உன் காதுமடல் வருடி

கழுத்து மடிப்பில் புதைந்து

பெண்மையின் மென்மை தொட்டு

இடை கொஞ்சம் ஒடித்து

உந்தன் ரகசியங்கள் அறிந்து

உன்னில் முழுக்க கலந்து

உன்னில் நான் ஓய்வாக

என்னில் நீ தோழியாக...

நீ என் தலையணையாக
உன் சேலை போர்வையாக
கோடைகாலம் நமக்கு
குளிர்காலமாய்...

முதலிரவில்
ஆடை விலக்க
பழகவில்லை...
நம்மை நாமே
நமக்குள் உடுத்த
பழகினோம்...

Saturday, May 19, 2012

உன் முதல் மச்சச்திலேயே
மயங்கி கிடக்கின்றேன்
மொத்த மச்சத்தையும்
எண்ணி முடிக்க
நாட்களாகுமோ...
வருடங்களாகுமோ...
நான் நெருங்க
நீ விலகுவாய்
இது ஆரம்பம்...
பின் வெட்கம் விலக
என்னை இறுக்குவாய்
இதுவும் ஒரு ஆரம்பம்...
குளிக்கும்போது
பார்க்ககூடாதென
சிணுங்குகிறாய்...
சரி... சரி... சரி...
நீ குளிக்கும்போது சரி...
நாம் குளிக்கும்போது...
இணையும் நேரத்து
இதழ் முத்தங்களைவிட
இதழ் சத்தங்கள்தான்
இனிமையாயிருகிறது...

Thursday, May 17, 2012


எங்கிருந்து என்
முதல் முத்தத்தை
தொடங்குவது
என்றேன்...
முதலில்
முத்தமிடுவதை
தொடங்கு  - பின்
அது தீர்மானிக்கும்
என்றாய் நீ...

உன்னை தொட்டவுடன்
நதியாய் வளைவாயா
கொடியாய் படர்வாயா
கடலாய் இழுப்பாயா
பனியாய் என்னுள்
மறைவாயா...

Wednesday, May 16, 2012


வளையல் சத்தம்
பிடிக்கும்தான்....
நீ வந்தபிறகு
வளையல்
உடையும் சத்தமும்
பிடித்திருக்கிறது...

Tuesday, May 15, 2012

உன் கூந்தலிலிருந்து

என் மீது தெறித்த நீர்

நீ மீண்டும் குளிக்க

காரணமாயிருக்குமோ...

சங்கமம் முடித்து

சங்கமமாகும்

வியர்வையில்

முத்தம் ஒன்று தா...

அது முத்தமல்ல...

உன் மனது...


என் இதழ்கொண்டு...

என் விரல்கொண்டு 

கவிதை எழுதிடவா... 

என் இதழ்கொண்டு 

கவிதை வரைந்திடவா... 

உன் இடை எனக்கு 

பதில் சொல்லச்சொல்லடி... 

Saturday, May 12, 2012


இடை தொடுகையில் 
நாணுவாயோ - நீ 
இடம் கொடுக்காது 
ஓடுவாயோ - இல்லை 
மிச்சம் எதற்கென்று 
மொத்தமும் தருவாயோ...

முத்தம் தர கஞ்சப்படாதே... 


உன்னிடம் பிடுங்கிய 


உடைகளை தருவதிலும் 


கஞ்சப்பட வேண்டியதிருக்கும்... 

முத்தம் தர அடம்பிடிப்பேன்... 


உன் கெஞ்சல்களையும் 


உன் கொஞ்சல்களையும் 


ரசிப்பேன் - பின் 


களைத்துவிட்ட உன்னிதழ்களை 


சிறைபிடிப்பேன்...

முத்தங்கள் இனிது...

அது முடிந்தபின்

என் இதழின்

எச்சங்களினிது…

அதனினும் இனிது

அது துடைக்கும்

உன்னிதழ்கள்...


என்னை அலுவலகம்

அனுப்பும் அவசரத்தில் நீ...

இதயம் கல்லாய்...

இதழ்கள் ஈரமாய்...

Friday, May 11, 2012


கனவில் கன்னத்தில்

முத்தமிட்டேன் எனச்சொல்லி

முகம் மூடிக்கொள்கிறாயே...

உண்மையைச்சொல்

கன்னத்தில் மட்டுமா

முத்தமிட்டேன்...

Thursday, May 10, 2012


சூரியன்

நம் இரவை முடியச்செய்யும்...

உன் முத்தம்

என் பகலை முடியச்செய்யும்... 

Wednesday, May 9, 2012

love and sex

எல்லாம் முடிந்தவுடன்
தள்ளிப் படுப்பது
காமம்...
தள்ளி இருந்தாலும்
எல்லாம் பெறுவது
காதல்...

Tuesday, May 8, 2012

சொல்லி அழ யாருமில்ல

இதில் சொந்தகத ஏதுமில்ல...

காதலிச்ச எல்லோருக்கும்

எல்லாமுமே வாய்ச்சதில்ல...

உங்கதையும் என்னப்போல

எங்கதையும் உன்னப்போல

ஆறுதலும் சொல்லிடத்தான்

யாரிடமும் வார்த்தையில்ல...

எந்தபிறவியிலும் யாருமிங்கு

யாருக்கும் சொந்தமில்ல

வந்தவேளை முடிஞ்சா

சொல்லிசெல்ல யாருக்கும் நேரமில்ல...

சாமிகிட்ட சொல்லி அழுதேன்

கல்லுக்குள்ள ஈரமும் பார்க்கவில்ல

யாரு செஞ்ச பாவம்

என்மனசு கல்லாபோன சாபம்....