Tuesday, January 29, 2013

பக்கம் பக்கமாய்
 நீ எனக்காய் எழுதிய
கவிதைகளை விட...
முதன் முதலில்
ஒரு புத்தகத்தில்
நீ மறைத்து  வைத்து
நான் படித்துவிட்ட
உன் காதல் கடிதம்
எனக்கு புனிதமானது..

Monday, January 28, 2013

malar

தூரம் நின்று பார்த்திருந்தேன
வாசமிகு மலரானாய்...
பக்கம் வந்து நான் பறித்தேன்
நெஞ்சினிலே முள்ளானாய்...

Wednesday, January 23, 2013


                                                                      
                                                                     கண்கள் பேசி காதல் செய்திருந்தால் 
                                                    
                                                    கண்ணீரில் கறைந்து போயிருக்கும் 
                                                    
                                                    கைகள்  பேசி காதல் செய்திருந்தால்
                                                    
                                                    கனவாய் மறந்து போயிருக்கும் 
                                                    
                                                   இதயம் பேசி காதல் செய்தோமே 
                                                   
                                                   இறந்த பின்னும் வாழ்ந்திருக்கும்...

Tuesday, January 22, 2013



உன்னைப்போல் உயரத்தில் 
கண்டேன் ஒருத்தியை  
என் இதயம் உரசவில்லை...
உன்னைப்போல் நிறத்தில் 
கண்டேன் ஒருத்தியை 
என் மனதில் நிறையவில்லை...
ஏனோ... ஏனோ...
யாரும் நுழையவில்லை...
என் இதயத்தில் இன்னும் 
ஏன் நீ  இறக்கவில்லை..

                          
                        

Thursday, January 17, 2013

TRUE LIFE

உண்மைகள் என்றும் தெய்வமும் இல்லை
பொய்கள் யாவுமே பாவமும் இல்லை
முழுமதி என்பதும் குறையுள்ள நிலவு
முகமூடி அணிந்து வாழவும் பழகு
எண்ணங்கள் சுகமாய் உள்ளவர் யாரோ
எண்ணியே ஏங்கி இறைவன் இறந்தானோ
உலகம் சிரிக்கும் நீ அழுதாலும் - நட்பே
உருகும் நீ மறந்து சென்றாலும்
உ றக்கம் ஒன்றே மருந்தென நீயும்
துயரம் மறந்து... துயில்கொள் தோழி...