Tuesday, July 30, 2013

உன் கண்ணீருக்கு காரணம்...


உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது...


Saturday, July 27, 2013

காதல் வற்றி போகுமோ...

பூமியென்ன சாமியென்ன
காதலின்றி வாழுமோ...
என்னை பிரிந்து நீயுமிருந்தால்
காதல் வற்றி போகுமோ...

Tuesday, July 23, 2013

காதல் தெளிக்க வருகிறாயா...

தினமும் நீ...
வாசல் தெளிக்க
வருகிறாயா...
காதல் தெளிக்க
வருகிறாயா...

Thursday, July 18, 2013

வேறென்ன செய்ய...

நேற்று புரையேறியது
நீயே நினைப்பதாய்
நினைத்துகொண்டேன்...
வேறென்ன செய்ய...

Friday, July 5, 2013

நான் இறப்பேன்...

என்னோடு நீ பேசும் மௌனங்கள்
நான் வெறுப்பேன்...
என்னோடு தீண்டாமை நீ செய்தால்
நான் இறப்பேன்...

எம் மனச உடச்ச…


உம் பேச்ச ரசிச்சேன்
உம் மூச்ச ரசிச்சேன்
உடஞ்ச வளையல் ரசிச்ச
எம் மனச உடச்ச… நீ...
அதையும் ரசிச்சேன்...

Thursday, July 4, 2013

கண்கள்

கண் மூடும்போது
களவாடுவார்கள்
நீ கண்கள் மூடியே
களவாடுகிறாய்...

மழை

ஏனிந்த மேகங்கள் இன்று
மழை பொழிந்தது  - அறிந்தாயா...
உன்னால்  இதயம் சிந்திய கண்ணீரை
உன்னிடமே  சேர்க்கவென  புரிந்தாயா...