Saturday, August 31, 2013

என் சமையல் அறையில்...


உதவுவதாய் சொல்லி
சமையலறையில் நுழைந்து 
நீ உதவியதாய் சரித்திரம்

ஏதேனும் உண்டா...

                         

உந்தன் விழிகள் என்பது...

 



உந்தன் விழிகள் என்பது 
  உன் பார்வைக்காகவா
                                
 என் போதைக்காகவா...

Thursday, August 29, 2013

உன் அணைப்பினில்...


உன் அணைப்பினில்
காற்று நுழைந்துவிடாதெனில்
அது காமம்
காமம் நுழைந்துவிடாதெனில்
அது காதல்
காதலும்  நுழைந்துவிடாதெனில்
அது நட்பு...

Tuesday, August 27, 2013

மறந்துவிடலாம்...

                                                             மறந்துவிடலாம்
                                                                 காதல்தானே...

Friday, August 23, 2013

இதயம் இருக்கிறதா...

கல்லாகவேனும் உலகில்
கடவுள் இருக்கின்றான்
அதுவாகவேனும் உன்னிடம்
இதயம் இருக்கிறதா...

Friday, August 2, 2013

உன் கண்களுக்காக...

கவிதை எழுதலாம் உன் விழிகளுக்காக...
கவிழ்ந்தும் கிடக்கலாம் உன் கண்களுக்காக...