Wednesday, September 18, 2013

என் கண்ணில் நீராய்...

 இறைவன் போலே தானே இருந்தாய்
இதயம் கல்லாய் தானே பிரிந்தாய்
எங்கும் நிறைந்தே தான் மறைந்தாய்
என் கண்ணில் நீராய் ஏன் உறைந்தாய்...

                   

Wednesday, September 4, 2013

நீ பிரியும் நேரம்

எத்தனை நேரம் 
உன்னுடன் பேசினாலும்
பொழுது போய்விடுகிறது
நீ பிரியும் நேரம்தான்
போக மறுக்கிறது...

Tuesday, September 3, 2013

ஆசையாய் தாவணி...


 ஆசையாய் தாவணி
அணிய  சொல்கிறாய்
அழகாய் வந்து நின்றால்
அணியாத இடங்களையே
அழகென்று பார்க்கிறாய்...
உன்னையா  நம்புவது...

அது எனக்கான இடம்....

கர்வமாய் திரியும்
உன் துப்பட்டாவிடம்
 நீ கண்டிப்போடு  சொல்
அது எனக்கான இடம் என்று...

Monday, September 2, 2013

என் பயணங்கள்....

                                                 
                                                     நீயாய் இருப்பாயோ
                                                     என்ற  குழப்பத்துடனும்
                                                     என்னுடைய நீயாய் 
                                                     இருந்துவிடமாட்டாயோ
                                                     என்ற  ஆசையுடனுமே  
                                                     என் பயணங்கள்....