Thursday, November 12, 2015

இந்த நட்பு புனிதமானது...


பிள்ளைப்பருவம் தொலைத்துபோவோம்
முகம்  என்பது மறந்துபோவோம்
முகவரி என்பது நினைவே அற்று போகும்
பெயர் சொல்லும் அறிமுகமும் தோல்வியாகும்
பெரிய மனித தோரணையில் நானோ நீயோ
விலகிபோகும் வலிகூட மனதில் உரைக்காது...
இதெல்லாம் அறிந்திராத
இந்த நட்பு புனிதமானது...

என் தேநீர் கோப்பையில் மிச்சம் வைக்கிறேன் ...



என் தேநீர் கோப்பையில் மிச்சம் வைக்கிறேன்
நினைத்ததுபோலவே என் கோப்பையில் நீ பருகுகிறாய்
நினைத்ததுபோலவே நீ விடை பெறுகிறாய்...
நினைத்ததுபோல மீண்டும் நீ வரவில்லை...
              இன்னும்
என்  தேநீர் கோப்பையில்
    மிச்சம் வைக்கிறேன் ...
 

Wednesday, November 11, 2015

உயிரென்று...



நம் உறவு தொடர்ந்திட
கடவுளிடம் வேண்டுகிறாய்...
நீ  என்  உயிரென்று  உணராதவரை
கடவுளும் கல்லாய்தான்  இருப்பான்...

Saturday, August 29, 2015

நல்லவள் நீ...


நாளை சந்திப்போமென்று
சொல்லி பிரிந்தாலும்...
இரவு முழுவதும் விலகாது
என்னோடு கனவிலிருக்கும்
நல்லவள் நீ...

படித்துப்பார் நேரமிருந்தால்..

எழுதப்படாத கவிதையிலிருக்கிறது
அத்தனை வலியும் காதலும்
 படித்துப்பார் நேரமிருந்தால்...

படித்துப்பார் நேரமிருந்தால்..


எழுதப்படாத கவிதையிலிருக்கிறது
அத்தனை வலியும் காதலும்
 படித்துப்பார் நேரமிருந்தால்...

உன் புன்னகைதான்...



என் கண்ணுக்கு தெரியாத
உன் புன்னகைதான்
என் உலகத்தை இயக்குகிறது...

Monday, March 30, 2015

காதல்...


உதிர்ந்தாலும்
உரமாவேன்
உயிரே...
நீ உதிர்த்தாலும்...