Tuesday, April 12, 2016

"இன்னைக்கு அழகாயிருக்கேனா"





உன்னை  
அழகென்பவரை 
முறைக்கிறாய்
"இன்னைக்கு 
அழகாயிருக்கேனா"
தினமும் கேட்டு
பதில்சொல்லாத
என்னை முறைக்கிறாய்
நல்லவள் நீ...

Monday, April 11, 2016

பெயருக்கேனும் சிரித்திருக்கலாம்...


பெயருக்கேனும் சிரித்திருக்கலாம்
எங்கோ பார்த்த ஞாபகமென
புருவம் நெரித்திருக்கலாம்...
கடந்தபின் திரும்பிபார்க்க
எத்தனித்திருக்கலாம்...

வேறென்ன உன்னிடம்

எதிர்பார்த்துவிட போகிறேன்...

Sunday, April 10, 2016

ஆடையவிழ்ந்து நின்றன...




வேடம்கட்டி அனுப்புகிறேன்
மறந்தது மகிழ்ச்சியென சிலநேரம்
சிரித்து வயிற்றுவலியென சிலநேரம்
நல்ல வாழ்கையென பூரித்து சிலநேரம்
நீ மட்டும் போதுமென பலப்பலநேரம்
பொய்யுரித்து புரிந்துகொள்கிறாய்
வேடம் தரிக்காத பதிலனுப்புகிறாய்
ஆடையவிழ்ந்து நின்றன என் கவிதைகள்...
#‎கவிதையல்ல தகவல்