Wednesday, September 14, 2016

கிறங்கி மறந்தேன்...


என் விழியில் விழுந்த

அந்த நொடியில் மறந்தேன்

எனக்கென இருக்கும் மனதை...

உன் மொழியில் மயங்கி

அதில் கிறங்கி மறந்தேன்

எனக்கென இருக்கும் உலகை...

என்னவளுக்கான கவிதை...

என்னவளுக்கான கவிதை என்றேன்
நீயென தெரிந்தும் யாரென கேட்கிறாய்
நல்லவள் நீ...

#வஞ்சி புகழ்ச்சி அணி

tamil

காற்றில் களையும் கேசத்தை
ஒதுக்கிவிட தெரியாதா என்றேன்
"நீ அதை ரசிப்பது தெரியும்“ என்றாய்
நல்லவள் நீ...

#வஞ்சி புகழ்ச்சி அணி

கனவில் வந்தேனா...

கனவில் வந்தேனா என்றேன்
இல்லை என்றதும் வாடினேன்...
என் தூக்கத்தை கெடுத்தாயடா
என்றபடி செல்லமாய் குட்டுகிறாய்...
நல்லவள் நீ...
#வஞ்சி புகழ்ச்சி அணி

ஆணாதிக்ககாரி...

"டி" போட்டு அழைக்காதே"டா"
என கொஞ்சும்
ஆணாதிக்ககாரி நீ...
#வஞ்சி புகழ்ச்சி அணி

தேவதைபோல்...

எனக்கு பிடித்த நிற உடையில்
தேவதைபோல் இருக்கிறாய் என்றேன்
பறந்துவிட போகிறேன் என போலி பயத்துடன்
இருக்க்க்க்க பற்றிக்கொள்கிறாள் என் கைகளை....
#வஞ்சி புகழ்ச்சி அணி

மருதாணி விரல்...

 எப்படி சிவந்திருக்கிறது பாரேன்
மருதாணி விரல் நீட்டி கேட்கிறாய்
பிடித்தவரை நினைத்துக்கொண்டே
இட்டால் சிவக்குமாம் என்றேன்
உன்னையெல்லாம் நினைக்கவில்லையென
கன்னம் சிவக்கிறாய்....
நல்லவள் நீ...
#வஞ்சி புகழ்ச்சி அணி

உன் பெரிய விழிகள்...

என்ன சொன்னாலும் விரியும்
உன் பெரிய விழிகள்
என்னை விழுங்கும்
ஆழ்துளை குழிகள்...
#வஞ்சி புகழ்ச்சி அணி


விக்கல்

விக்கல் நிறுத்த தண்ணீர் கேட்டால்
கருணையில்லாது முறைக்கிறாய்
நீ என்னை நினைப்பதை
நிறுத்த முயல்கிறேனென்று
நல்லவள் நீ...
#வஞ்சி புகழ்ச்சி அணி


வெள்ளிக்கிழமையானால்...

வெள்ளிக்கிழமையானால்
புடவை கட்டி வருகிறாயே
உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்றேன்...
எனக்கு பிடித்ததைத்தான்
கட்ட வேண்டுமென்றால்
உன்னைத்தான் முதலில்
கட்டிக்கொள்ளவேணுமென்கிறாய்...
நல்லவள் நீ...

#வஞ்சி புகழ்ச்சி அணி


இதற்குத்தான் ஆசைப்பட்டேன்...

இதற்குத்தான்
ஆசைப்பட்டேன்
எனினும்
கிடைத்தவுடன்
இன்னும்
ஆசைப்படவைக்கிறாய்...
#வஞ்சி புகழ்ச்சி அணி