என்னை காதலித்திடாத தேவதைகளுக்கு...
கவிதைகள் இறந்து காலங்கள் ஆகின்றன....
Tuesday, April 25, 2017
கொஞ்சலழகி #18
கொஞ்சி முடிக்கையில்
வாடிவிடுகிறாய்
இன்னும் இன்னுமென
கண்களாலேயே
கொஞ்ச
ஆரம்பித்துவிடுகிறாய்
என் கொஞ்சலழகி
கொஞ்சலழகி #17
இன்னும்
ஒருமுறை என்பாள்
ஓராயிரம்முறை
கொஞ்சினாலும்...
என் கொஞ்சலழகி
கொஞ்சலழகி #16
என்ன நீ கொஞ்சம்கூட
மரியாதையில்லாம
டா போட்டு பேசற...
கொஞ்சலில்
இதுதாண்டா மரியாதையென
அகராதி புரட்டுகிறாள்
என் இனிய
கொஞ்சல் அகராதிக்காரி...
கொஞ்சலழகி #15
உன்னை
கொஞ்சிய
எனக்கு
பரிசுண்டா
என்றேன்...
இல்லையில்லை
இதழ்களுக்கு
மட்டும்தான்
என்கிறாள்...
கொஞ்சலழகி
கொஞ்சலழகி #14
சும்மாவே இருக்கமாட்டியா
என அலுத்துக்கொள்ளும்
உன் இதழ்களைத்தான்
முதலில் கொஞ்சிடவேண்டும்
என்பது உன்
கொஞ்சலின் அகராதி...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #13
கொஞ்சிகிட்டே இருந்து
என் பொழப்ப கெடுக்காத என்றேன்
உன்னை கொஞ்சி கெடுக்கிறதுதானே
என் பொழப்பே என்று கண்ணடிக்கிறாள்
கொஞ்சல்காரி....
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #12
பேசிக்கொண்டிருக்கையில்
புரையேறிவிடுகிறது...
கெட்டகெட்ட வார்த்தைகளில்
அழகழகாய் கொஞ்சுவாளினி...
@
கொஞ்சலழகி
கொஞ்சலழகி #11
எப்படியெல்லாம் கொஞ்சலாம்
என்ற ஒத்திகையெல்லாம்
ஒத்துழையாமை நடத்தும்
கொஞ்சு மாமா என்ற
உன் கொஞ்சலில்...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #10
கொஞ்சல்பேசி
எடுத்தவுடன்
கொஞ்சிவிடுகிறாள்...
கொஞ்சல்களோடு
முத்தங்களும்
வரவேற்க்கப்படுகின்றன...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #9
கண்களால் கொஞ்சிவிட்டு
இதழ்களுக்கு திரையிடுகிறாய்
திருடச்சொல்லி தூண்டிவிட்டால்
திருடனாகாமல் என்செய்வேனடி...
நான் அவ்வளவு நல்லவன் கிடையாதடி...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #8
நீ
கொஞ்சி பேசியே
கொஞ்சல்பேசி
ஆனதடி
செல்பேசி
@
கொஞ்சலழகி
கொஞ்சலழகி #7
ஊடல் முடித்துவிட
மறுப்பேன் நான்...
இன்னும் அழகாய்
கொஞ்சுவாள்
கொஞ்சல்காரி....
@
கொஞ்சலழகி
கொஞ்சலழகி #6
கொஞ்சிபேசியதெல்லாம்
நினைத்து பார்ப்பேன்
என்றேன் நான்...
நினைத்துக்கொண்டே
கொஞ்சி பார்ப்பேன்
என்றாள் கொஞ்சல்காரி...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #5
உன் கொஞ்சல்களில்
என் கவிதை பிறக்கிறது
உன் முத்தங்களில்
வளர்கிறது...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #4
நான் வேலை செய்யும்போது
கொஞ்சுவதுதான் உன்
வேலையோ...
@கொஞ்சலழகி
கொஞ்சலழகி #3
உன் கண்கள்
கொஞ்சிடும்
குற்றத்திற்காக
உன் இதழ்களை
சிறைபிடிக்கவா
...
#கொஞ்சலழகி
கொஞ்சலழகி #2
காதலாய் கொஞ்சும்
உன் விழிகள்...
காதலை உறிஞ்சும்
உன் இதழ்கள்...
உன் அடிமைதானடி
நான்
...
#கொஞ்சலழகி
கொஞ்சலழகி #1
கொஞ்சியது போதும் விடுங்க
என்றே கொஞ்ச வைக்கிறாய்...
#கொஞ்சலழகி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)